லேபிள்கள்

2.8.14

பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர்கள் 20,000 பேருக்குப் பயிற்சி

கணிதப் பாடங்களை எளிமையாக கற்பிப்பது தொடர்பாக ஒன்பது,பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர்கள் 20 ஆயிரம் பேருக்கு மாநிலக்  கல்வியியல், ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பயிற்சி வழங்கப்படஉள்ளது.


ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதத்தைஎளிமையாகக் கற்பித்தல், கணித உபகரணங்களைப்பயன்படுத்துதல், நவீன முறையில் எடுத்துக்காட்டுகளுடன்மாணவர்களுக்குக் கணிதத்தை விளக்குதல் போன்றவற்றில்ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தருமபுரி, கரூர், தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகியஇடங்களில் கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சிஇப்போது நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மண்டல வாரியாக பயிற்சி பெற்ற இந்த கருத்தாளர்கள்,மாவட்டங்களில் உள்ள சுமார் 20 ஆயிரம் கணித ஆசிரியர்களுக்குஆகஸ்ட் மாதத்தில் பயிற்சியை வழங்குவார்கள் எனவும் அவர்கள்தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக