மத்திய அரசு ஊழியர்களின், ‘அலவன்ஸ்’ தொடர்பாக, ஏழாவது ஊதியக் குழு அளித்துள்ள பரிந்துரையை, சீராய்வு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது.
இதையடுத்து, புதிய அலவன்ஸ் மற்றும் அலவன்ஸ் உயர்வு குறித்த அறிவிப்பை, மத்திய அரசு விரைவில் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 47 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர்.
மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக, ஏழாவது ஊதியக் குழு அளித்த பரிந்துரைக்கு, 2016 ஜூன், 29ல், மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியது. அதே சமயம், அலவன்ஸ் குறித்த பரிந்துரைகள் மீது மட்டும் முடிவு எடுக்காமல், ஒத்தி வைத்தது. இதையடுத்து, அலவன்ஸ் தொடர்பான பரிந்துரைகளை சீராய்வு செய்ய, நிதித் துறை செயலர் அசோக் லாவாசா தலைமையில், குழு அமைக்கப்பட்டது. இக்குழு, ஏழாவது ஊதியக் குழு தெரிவித்த, அலவன்ஸ் பரிந்துரைகளை சீராய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வந்தது. தற்போது, இப்பணிகள் முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
உ.பி., – மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருவதால், புதிய அலவன்ஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, மத்திய அரசு வெளியிடாமல் ஒத்தி வைத்துள்ளது. ‘மார்ச், 11ல், தேர்தல் முடிவுகள் வெளியான பின், மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய அலவன்ஸ், அலவன்ஸ் உயர்வு ஆகியவை குறித்த அறிவிப்பு வெளியாகும்’ என, அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர், மேலும் கூறியதாவது: ஏழாவது ஊதியக் குழு, நடைமுறையில் உள்ள, 193 வகையான அலவன்சுகளை ஆராய்ந்தது; அவற்றில், 51 அலவன்சுகளை நீக்கவும், 37 அலவன்சுகளை சீரமைக்கவும், மத்திய அரசுக்கு பரிந்துரைத்து இருந்தது. இப்பரிந்துரையை, அசோக் லாவாசா குழு, சீராய்வு செய்து முடித்துள்ளது. இக்குழு, மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை, பயண அலவன்ஸ் ஆகியவற்றை, கணிசமாக உயர்த்த பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. மத்திய அரசின் அறிவிப்பிற்கு பின், புதிய அலவன்ஸ் நடைமுறை, வரும் ஏப்., முதல் அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
அதிகரிப்பு:நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், மத்திய அரசு ஊழியர்களின் அலவன்ஸ் செலவினங்களுக்கு, 64,677 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இது, 2017 – 18ம் நிதியாண்டிற்கு, 69,222 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதே காலத்தில், பயண அலவன்ஸ், 4,323 கோடி ரூபாயில் இருந்து, 4,714 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. வரும் நிதியாண்டில், பயண அலவன்ஸ் தவிர்த்து, இதர அலவன்சுகளுக்கான ஒதுக்கீடு, 7 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக