லேபிள்கள்

24.2.17

'வாட்ஸ் ஆப்' ஆசிரியர்களுக்கு தடை

பிளஸ் 2 தேர்வு நாட்களில், ஆசிரியர்கள், அதிகாரிகள், 'வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.


பிளஸ் 2 தேர்வு, மார்ச், 2ல் துவங்குகிறது. இந்த தேர்வை, மாநிலம் முழுவதும், 9.30 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வை எந்தவித முறைகேடுகளுக்கும் இடமின்றி நடத்துவதற்கு, தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மண்டல பொறுப்பு அதிகாரிகள் மூலம், மாவட்ட வாரியாக நடக்கும் கூட்டத்தில், ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக