'ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வை, தள்ளி வைக்க வேண்டும்' என, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ன்படி, அரசு மற்றும் தனியார்
பள்ளிகளில், ஆசிரியர் களாக பணியில் சேர, மாநில அரசின், 'டெட்' அல்லது மத்திய அரசின், 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில், வழக்குகள் காரணமாக, 2013க்கு பின், 'டெட்' தேர்வு நடக்கவில்லை.
அமைச்சர் அறிவிப்பு : சமீபத்தில் வழக்குகள் முடிவுக்கு வந்ததால், ஏப்ரல், 29 மற்றும், 30ல், 'டெட்' தேர்வு நடக்கும் என, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஆனாலும், அதிகார பூர்வ அறிக்கையை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிட வில்லை. இந்நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
அவகாசம் தேவை : இது குறித்து, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: போட்டி தேர்வுக்கு தயாராக, மூன்று மாதம் அவகாசம் வேண்டும். தற்போது, 'டெட்' தேர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகளில் பலர், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளிலும், பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர் களாகவும் பணியாற்றுகின்றனர். பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட அனைத்து வகுப்பு களுக்கும், ஏப்., 30 வரை தேர்வுகள் நடக்க உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான முன் தயாரிப்பு பணிகளும் நடந்து வருகின்றன. அதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள், 'டெட்' தேர்வுக்கு தயாராக அவகாசம் இல்லை. இந்த குறுகிய கால அவகாசத்தில், பள்ளி பணிகளை விட்டு விட்டு, 'டெட்' தேர்வுக்கு தயாராவது மிக கடினம். எனவே, தேர்வு தேதியை, ஜூலைக்கு தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக