லேபிள்கள்

25.2.17

'டெட்' தேர்வு விண்ணப்பம் மார்ச் 6 முதல் வினியோகம்

'ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, மார்ச், 6 முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்' என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான,
டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.டி.ஆர்.பி., வெளியிட்டுள்ள அறிவிக்கை: டெட் தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச், 6 முதல் 22 வரை வினியோகம் செய்யப்படும். மார்ச், 23 மாலை, 5:00 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். ஏப்., 29 மற்றும் 30ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும். விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ள, மாவட்ட மையங்களின் முகவரி, விரைவில் அறிவிக்கப்படும். பி.எட்., - டி.டெட்., முடித்தவர்கள் இந்த தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள். டெட் குறித்த கூடுதல் தகவல்களை,http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக