லேபிள்கள்

24.2.17

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு :மே 12, 19ல் 'ரிசல்ட்' வெளியீடு

 பிளஸ் 2 மற்றும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நேற்று அறிவித்தார். 

இதுகுறித்து, அவர் கூறியதாவது: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை, 20 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச், 8 முதல், 30 வரை நடக்கிறது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 2 முதல், 31 வரை நடக்கிறது. தேர்வு எழுதிய பின் தான், முடிவுகளை அறிவிக்கும் நடைமுறை இருந்தது. இதனால், ஏற்படும் பல்வேறு இடையூறுகளை தவிர்ப்பதற்காக, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை, தேர்வு நடப்பதற்கு முன் வெளியிடுகிறோம். 


பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 12ல், பத்தாம் வகுப்பு தேர்வு முடிகள், மே, 19ல் வெளியாகும். அன்றைய தினம், காலை, 10:00 மணிக்கு, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.இடைநிலை ஆசிரியர்களுக்கான, தகுதித் தேர்வு, ஏப்., 29; பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு, ஏப்., 30ல் நடைபெறும். ஆசிரியர் நியமனம் தொடர்பான, 'வெயிட்டேஜ்' அரசாணை தொடர்ந்து நீடிக்கிறது.தமிழகத்தில், 'நீட்' தேர்வு தேவையில்லை என, சட்டம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். மத்திய அரசு முடிவுக்காக காத்திருக்கிறோம். மத்திய அரசின் முடிவுக்கு பின், அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக