வருங்கால வைப்பு நிதி எனப்படும், பி.எப்., திட்ட கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக அளிக்கப்பட்டுள்ள காலக்கெடு, மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய திட்டமான, பி.எப்.,பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், தங்கள், பி.எப்., கணக்குடன், ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என, மத்திய தொழிலாளர் நலத்துறை கூறியிருந்தது. இதற்கு, வரும், 28 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தக் காலக்கெடு, மார்ச், 31 வரை நீட்டிக்கப்படுவதாக, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பி.எப்., ஓய்வூதியம் பெறுவோர், தங்களுடைய, 'லைப் சர்டிபிகேட்' எனப்படும், உயிருடன் இருப்பதற்கான ஆதார சான்றை, மின்னணு முறையில் மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடுவும், மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக