பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் முன், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை பாய உள்ளது. பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வு, மார்ச் 8ல், துவங்குகிறது. மாநிலம் முழுவதும், 2,500 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடக்க உள்ளது. பொதுத் தேர்வு முடிவுகளை, மே முதல் வாரத்தில் வெளியிட, அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்பின், பிளஸ் 1 வகுப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்படுவர். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு, பிப்., 2 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இவை, 1,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. 'பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டிய மாணவர் சேர்க்கைக்கு, தனியார் பள்ளிகள் தற்போதே விண்ணப்பங்கள் வழங்குவது விதிகளை மீறிய செயல்' என, பள்ளிக் கல்வி, மெட்ரிக் இயக்குனரகங்களுக்கு, பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர்.எனவே, உரிய நடவடிக்கை எடுக்க, விதிமீறிய பள்ளிகள் குறித்த பட்டியலை தயாரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக