லேபிள்கள்

24.2.17

பள்ளி பஸ்களில் கண்காணிப்பு கேமரா

'மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளி பஸ்களில், 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டியது கட்டாயம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளி பஸ்களில், பாதுகாப்பு அம்சங்கள்
கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. அதன்படி, ஒவ்வொரு பள்ளியும், மாணவர்களை அழைத்து வரும் பஸ்களுக்கு, மஞ்சள் நிறம் பூசியிருக்க வேண்டும்; பஸ்களின் முன்னும், பின்னும், 'பள்ளி பஸ்' என, பெரிய எழுத்தில் எழுதியிருக்க வேண்டும்; பஸ்களில் முதலுதவி பெட்டி இருக்க வேண்டும்; கதவுகள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும்.பஸ்களுக்குள் இருக்கும் மாணவர்கள், வெளியே தெரியும் வகையில், ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஜன்னல்களில் குறுக்கு கம்பிகள் மூலம், பாதுகாப்பு வசதி செய்ய வேண்டும். ஜி.பி.எஸ்., என்ற, இருப்பிடம் அறியும் கருவி மற்றும் 'சிசிடிவி' கேமரா வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக