லேபிள்கள்

24.2.17

டி.இ.ஓ., பணி நியமனம் : கவுன்சிலிங் அறிவிப்பு

'மாவட்ட கல்வி அதிகாரியான, டி.இ.ஓ., பதவிக்கு, மார்ச், 1ல் கவுன்சிலிங் நடக்கும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள, 11 டி.இ.ஓ., இடங்களை நிரப்ப, ஜனவரியில் நேர்முகத் தேர்வு நடந்தது. இதில், தேர்வு பெற்றவர்களுக்கு, மார்ச், 1ல் கவுன்சிலிங் நடக்கும். அதற்கான பட்டியல், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது' என, குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக