பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும்பணியாளர்களின் விபரங்களை, உடனடியாக ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தனி நபர் தகவல் தொகுப்பில், பதிவு செய்ய வழங்கப்பட்டுள்ள குறியீட்டு எண்ணை பயன்படுத்தி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் நடப்பு கல்வியாண்டில் பணியில் சேர உள்ளவர்களின் விபரங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளதை, கல்வித்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்.சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி அலுவலர்களும், பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தலைமையாசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இப்பணியில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக