லேபிள்கள்

28.3.13


ஏப்ரல் 5-ம் தேதி முதல்கட்ட தேர்தல் 5855 கூட்டுறவு சங்கத்துக்கு நாளை வேட்பு மனு தாக்கல்

 தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 16 ஆண்டுக்கு பிறகு தேர்தல் நடக்கிறது. மாநிலம் முழுவதும் இணை பதிவாளர், இதர செயல் பதிவாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 22,532 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில், மாநில அளவிலான கூட்டுறவு விற்பனை சங்கங்கள் தவிர, எஞ்சியுள்ள 22,192 சங்கங்களுக்கு நான்கு கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 5,855 சங்கங்களுக்கு ஏப்.5ம் தேதி தேர்தல் நடக்கிறது. 

இந்த தேர்தலை திமுக புறக்கணித்துள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை நடக்கிறது. வாக்குப்பதிவு நடக்கும் நாளுக்கு மூன்று மாதங்கள் முன்பு வரை சங்கத்தில் கடன் வாங்கியிருந்து, தவணை தவறியிருக்க கூடாது. மேலும், அபராதம் அல்லது குற்றவியல் தண்டனைக்கு ஆளானவர்கள், எழுதப்படிக்க தெரியாதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக