லேபிள்கள்

25.3.13

     2013-14ம் ஆண்டில் பகுதி நேர B.E.,-B.Tech., படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், ஏப்ரல், 1ம் தேதி முதல், 15ம் தேதி வரை, 10 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

     அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், பகுதிநேர B.E.,-B.Tech. படிப்புகள் நடத்தப்படுகின்றன. SC.,-ST., மற்றும் SC-அருந்ததியர் பிரிவு மாணவ, மாணவியர், 150 ரூபாய்க்கும், இதர பிரிவு மாணவர்கள், 300 ரூபாய்க்கும், "செயலர், பகுதிநேர பி.இ.,-பி.டெக்., சேர்க்கை, கோவை தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கோவை" என்ற பெயரில், டி.டி., எடுத்து வழங்கி, விண்ணப்பங்களை பெறலாம்.


             பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். மாணவர்கள், மே மாதம் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். இதற்கான கடிதம், மாணவர்களுக்கு அனுப்பப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

      விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள் அரசு பொறியியல் கல்லூரி, கோவை; அரசு பொறியியல் கல்லூரி,சேலம்; அரசு பொறியியல் கல்லூரி, நெல்லை; அழகப்பா பொறியியல் கல்லூரி, காரைக்குடி; பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, வேலூர்; அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர்; பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லூரி, கோவை தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கோவை; தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை; தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக