லேபிள்கள்

20.11.13

சென்னை மாநகராட்சிக்கு வந்த மொட்டை கடிதத்தால் போலீசில் சிக்கிய போலி ஆசிரியர்கள்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போலி ஆசிரியர்கள்பணியாற்றிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.இதுதொடர்பாகமத்திய குற்றப்பிரிவு போலீசாரின் அதிரடி வேட்டையில் குப்பன்,ராஜாமுருகன் ஆகிய 3 போலி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில் குப்பனும்ராஜாவும்கொடுங்கையூர் எம்.ஜி.ஆர்.நகரில்உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களாகபணியாற்றி வந்துள்ளனர்கே.கேநகர் எம்.ஜி.ஆர்நகரில் உள்ளநடுநிலைப்பள்ளியில் முருகன் பணியாற்றி வந்துள்ளார்.

10–ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இவர் பிளஸ்–2 சான்றிதழையும்,ஆசிரியர் பயிற்றி சான்றிதழையும்ரூ.30 ஆயிரம் கொடுத்து விலைக்குவாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குப்பன் ரூ.25 ஆயிரம் கொடுத்தும்ராஜா ரூ.15 ஆயிரத்துக்கும் போலிஆசிரியர் பயிற்சி சான்றிதழ்களை வாங்கியிருக்கிறார்கள்இவர்கள்இருவரும் பட்டம் படித்தவர்கள்.

இவர்கள் தவிர இன்னும் 5–க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்கள்மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.

கடந்த 1998–ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர்கள்கடந்த 15ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித தங்கு தடையுமின்றி பணியாற்றிவந்திருப்பது கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனை ஆண்டுகளாக சம்பளத்துடன் சேர்த்து அரசின் அத்தனைசலுகை களையும் பெற்று வந்த இந்த போலி ஆசிரியர்களை,மொட்டை கடிதம் ஒன்றே சிக்க வைத்துள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:–

2011–ம் ஆண்டு தொடக்கத்தில் சென்னை மாநகராட்சிக்குதிருவண்ணாமலை அருகே உள்ள துரிஞ்சா புரத்தில் இருந்து பெயர்இல்லாமல் மொட்டைக் கடிதம் ஒன்று எழுதப்பட்டிருந்ததுஅதில் 58ஆசிரியர்களின் பெயர்முகவரிஅவர்கள் பணிபுரியும் பள்ளி ஆகியவிவரங்கள் இடம் பெற்றிருந்தனஇவர்களில் பெரும்பாலானவர்கள்போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் என்றதிடுக்கிடும் தகவலும் கடிதத்தில் இடம் பெற்றிருந்தது.

மாநகராட்சி அதிகாரிகள்மொட்டை கடிதம்தானே என அதனைஅலட்சியம் செய்யாமல் அதுபற்றி விசாரிக்க மாநகராட்சி'விஜிலென்ஸ் கமிட்டி'க்கு உத்தரவிட்டனர்இதைத்தொடர்ந்துகடிதத்தில் குறிப்பிட்டிருந்த 58 ஆசிரியர்களின் பட்டியலும் பள்ளிகல்வி துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுஅங்கு கல்வி துறைஅதிகாரிகள் நடத்திய அதிரடி விசாரணையில் 10 ஆசிரியர்கள் போலிசான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது உறுதியானது.

இதனை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் சென்னை போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டதுகமிஷனர் ஜார்ஜ்உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர்நல்லசிவம்துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோர்மேற்பார்வையில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.

உதவி கமிஷனர் முருகேசன்இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோரதுதலைமையில் சப்– இன்ஸ்பெக்டர்கள் மேரிராணிகண்ணன்ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்திகுப்பன்ராஜாமுருகன் ஆகிய போலி ஆசிரியர்களை பிடித்துள்ளனர்.போலீசாரின் வலையில் இன்னும் 5–க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்விரைவில் சிக்குவார்கள் என்று தெரிகிறது.


மாநகராட்சி பள்ளிகளில் புயலை கிளப்பியிருக்கும் இந்த போலிஆசிரியர்கள் விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தமொட்டை கடித ஆசாமி’ யார்என்பது பற்றியும் விசாரணைநடத்தப்பட்டதுஆனால் 3 ஆண்டுகளாகியும் அவர் யார்என்பதேதெரியவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக