லேபிள்கள்

21.11.13

தேர்வறையில் 20 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது - அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர்

தேர்வறையில் 20 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது என, அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார். பிளஸ்2, பத்தாம் வகுப்பு அரசு தேர்வு முன்னேற்பாடு தொடர்பான 4 மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
தேர்வுத்துறை இணை இயக்குனர் பேசிதாவது: தேர்வறைகள் 20க்கு20 அடி அளவுள்ள அறையாகவும், ஒரு அறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். கடைசி அறையில் மட்டும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குறைவாக இருக்கலாம். குடிநீர், கழிப்பறை, இருக்கை வசதிகள், சுற்றுச்சுவர் இருக்க வேண்டும் பெஞ்சுகளை மற்ற பள்ளிகளில் இருந்து கொண்டு வர கூடாது. வசதி இல்லாத பள்ளிகளுக்கு தேர்வு மையம் அனுமதிக்க கூடாது, என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக