தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனரின் கட்டுப்பாட்டு அடிப்படையின் கீழ் அரசு அனுமதி பெறாமல் செயல்படும் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் மீது விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. இந்நிலையில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 1,296 தொடக்க பள்ளி மற்றும் 723 மழலையர் பள்ளிகளுக்கு அறிக்கை கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அளிக்கப்பட்டது.
அங்கீகாரமின்றி செயல் படும் இப்பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் (2014-15) மாணவர்களை சேர்க்காமல் இருக்கவும், அப்பள்ளிகளில் தற்போது பயின்று வரும் மாணவர்களை அருகில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து மாவட்ட கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், மூடப்படும் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியும் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 62 பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டது. இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பெயர்பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என கோவை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி காந்திமதி (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக