தேர்வுத்துறையின் குழறுபடியான அறிக்கைகளால் பிளஸ் 2 மாணவர்கள் அலைக்கழியும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்கள், மறுகூட்டலுக்கு நேற்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது.
பள்ளியில் பயின்ற மாணவர்கள், அந்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பிளஸ் 2 தேர்வில் வெற்றி மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்காக விண்ணப்பிக்க, தங்களின் கட்ஆப்பை உயர்த்த வேண்டும் என்ற ஆர்வத்தில், அதிகளவிலான மாணவர்கள் மறுகூட்டலுக்காக விண்ணப்பிக்க நேற்று பள்ளிகளுக்கு சென்றிருந்தனர். ஆனால், சென்னையின் பல பள்ளிகளில், தேர்வுகள் இயக்ககம் கூறியபடி மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘ மறுகூட்டல், மறு மதிப்பீடு தேவைப்படுபவர்கள் விடைத்தாள்கள் கேட்டு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் வந்து சேரவில்லை என்றும் இது தொடர்பாக உரிய அறிவுறுத்தலோ வழிகாட்டுதலோ வரவில்லை என்றும் அதனால், நீங்கள் தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்துக்கு சென்று முறையிடுங்கள்’’ என்று பல பள்ளிகள் மாணவர்களிடம் தெரிவித்துள்ளன.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும், சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்துக்கு சென்று மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் கோரினர். ஆனால் அங்குள்ள அதிகாரிகள், விண்ணப்பங்கள் பள்ளிகள் மற்றும் தேர்வு எழுதிய மையங்களில் மட்டுமே வழங்கப்படும் என்று அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர். பின்னர் மறுகூட்டலுக்கான விண்ணங்களை உடனடியாக வழங்க கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, அரசு தேர்வுத்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்களின் திடீர் போராட்டத்தால் அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வு எழுதியவர்கள், மறுகூட்டலுக்காக நேற்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த பள்ளிகளிலே வழங்கப்படும் என்றும் அரசு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்திருந்தது. அதன்படி, நேற்று நாங்கள் பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பங்களை கோரினோம். ஆனால், அங்கு எங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை.
தேர்வுத்துறை பிளஸ் 2 முடிவுகளை வெளியிட்டதோடு தங்கள் கடமை முடித்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. இந்த முறை அதிக அளவிலான மாணவர்கள் இருநூறுக்கு இருநூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதனால் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான கட்ஆப் உயர்ந்துள்ளது.எனவே, எங்கள் பிள்ளைகளின் மதிப்பெண்கள் முழுமையாக அறிந்து கொள்ள மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வந்தோம். ஆனால், எங்களை பல இடங்களில் அலைய வைக்கின்றனர். இதனால் தேர்வுத்துறை கூறிய 14ம் தேதிகளுக்குள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதில் தாமதம் ஏற்படுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது என்றனர். தேர்வுத்துறை மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளிகளின் சரியான அணுகுமுறை இல்லாததால் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மறுமதிப்பீடு செய்தால் மதிப்பெண் குறையுமா?
மறு மதிப்பீடு என்பது மூன்று மூத்த பாட ஆசிரியர்கள் குழுவால் மீண்டும் விடைத்தாளை திருத்துவதாகும். இதில் மதிப்பெண் அதிகரிக்கவோ, குறையவோ வாய்ப்புள்ளது. மதிப்பெண்ணை குறைக்கவோ, அதிகரிக்கவோ இந்த குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதனால், மறுமதிப்பீடு செய்யவே மாணவர்கள் பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மறைமுகமாக மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுவது போல் அரசுத் தேர்வுத்துறையின் அறிக்கை உள்ளது என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக