லேபிள்கள்

11.5.14

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் 14-ந்தேதி முதல் பெறலாம்

பிளஸ்–2 முடிவு வெளியானதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன.
தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் கலை, அறிவியல் கல்லூரிகளில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறும் பணி தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இதற்கிடையே எம்.பி. பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த விண்ணப்பங்களை வரும் 14–ந்தேதி முதல் 30–ந்தேதி வரை பெறலாம்.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 19 மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 2–ந்தேதிக்குள் கொடுக்க வேண்டும்.
இதுதொடர்பான மேலும் கூடுதல் தகவல்களை www.tnhelath.orgமற்றும் www.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக