லேபிள்கள்

17.5.14

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கோரிக்கை வையுங்கள், அலகு விட்டு அலகு மாறுவதல் தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எந்த பயனும் இல்லை?

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு அலகுவிட்டு அலகு மாறுதல் பெற்றுச் செல்லும் போதோ, அல்லது நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப் படுவதால் அதில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு ஈர்த்துக் கொள்ளப்படும் போதோ, அவர்கள் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றிய பணிக்காலத்தை இழந்து பள்ளிக்கல்வித்துறையில் இளையவராக கருதப்படுவர்.

           உதாரணமாக 2010 ஆண்டு இது போன்று அலகு விட்டு அலகு மாறுதல் நடைபெற்றது. அதில் 2006 ல் தொடக்க கல்வித்துறையில் பணிவரன்முறை செய்யப்பட்ட பல பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித் துறைக்கு அலகு மாறுதலில் சென்று  2010  ஆண்டு வரை பள்ளிக்கல்வித் துறையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை விட பணிமூப்பில் இளையவராக இன்று வரை பணிபுரிந்து வருகின்றனர். இன்று அவர்கள் தொடக்க கல்வித் துறையில் பணிபுரிந்து இருந்தால் ஒரு வேளை அ.ஆணை 166 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று  இருக்கலாம்.
         அவர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு சென்றதால் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வாய்ப்பு நழுவி சென்றதுடன் பள்ளிக்கல்வித் துறையில் இளையவராக பணிபுரிந்து வருகின்றனர்.
         எனவே தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உண்மையாக  சங்கங்கள் உதவிசெய்ய வேண்டும் என்று எண்ணம் இருந்தால் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க இயக்குனர்களிடமும், பள்ளிக்கல்விச் செயலரிடமும் கோரிக்கை வையுங்கள்.
        தற்போது தொடக்ககல்வித்துறையில் பணியாற்றும் உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்படுவதை இயக்குனர்களிடமும், பள்ளிக்கல்விச் செயலரிடமும் எடுத்துச் சொல்லுங்கள்.

       இதுவே தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்காக நீங்கள் வைக்கும் உண்மையான கோரிக்கையாக இருக்க முடியும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக