லேபிள்கள்

12.5.14

"சி.பி.எஸ்.இ., "ரிசல்ட்' வரவில்லை என்றாலும் கவலை வேண்டாம்'

தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் கொடுத்த ஆலோசனைகள்: 

சி.பி.எஸ்.இ., "ரிசல்ட்' வரவில்லை என்றாலும், கவலை வேண்டாம். இருக்கும் தகவல்களை வைத்து விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் கிடைக்க தாமதமாகும்; டவுண்லோடு செய்த மதிப்பெண் பட்டியல் போதும்.

வேறு, ஏதாவது சான்று இல்லை என்றாலும் கவலை வேண்டாம். இருக்கும் ஆவணங்களை இணைத்து அனுப்பினால் போதும். அதன் பின், மற்ற ஆவணங்களை அனுப்பலாம்.

விளையாட்டுப் பிரிவில், 500 இடங்கள்; முன்னாள் ராணுவ வீரர் - 150 இடங்கள்; சுதந்திர போராட்ட வீரர் பிரிவு - 10 இடங்கள் உள்ளன.

வெளியூரில் இருப்போர், தபாலில் விண்ணப்பத்தை அனுப்பினால் போதும். விண்ணப்ப எண்ணை 
மறக்காமல் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். 

பல்கலை வெப்சைட்டில், நிலவரம், "அப்டேட்' செய்யப்படுகிறது.

விளையாட்டுப் பிரிவில் விண்ணப்பம் செய்வோர், நேரில் வந்து தான் விண்ணப்பத்தை தர வேண்டும்.

கவுன்சிலிங்கிற்கு உங்கள் பெற்றோருடன் வாருங்கள். வேறு யாரையும் அழைத்து வராதீர்கள்; அவர்கள் உங்களை திசை திருப்பி, தங்களுக்கு வேண்டிய கல்லுாரியில் சேர்த்து, லாபம் அடைந்து விடுவர்.

கவுன்சிலிங்கிற்கு, 2 மணி நேரம் முன் வந்து விடுங்கள். கவுன்சிலிங்கின்போது செலுத்த வேண்டிய, 5,000 ரூபாய்க்கு, "டிடி' எடுத்து வர வேண்டியதில்லை. பல்கலை மையத்தில் உள்ள வங்கியிலேயே பணமாகச் செலுத்தலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக