லேபிள்கள்

14.5.14

மருத்துவ படிப்புகளுக்குஇன்று முதல் விண்ணப்பம்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் வினியோகம் இன்று தொடங்குகிறது.தமிழகத்தில் உள்ள, 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு, 383 போக, மீதம், 2,172 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும். இதுதவிர, 12 தனியார் கல்லுாரிகள் மூலம், 900 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும்.
பி.டி.எஸ்., படிப்பு: தமிழகத்தில், 100 பி.டி.எஸ்.,
இடங்களுடன், சென்னை அரசு பல் மருத்துவக்கல்லுாரி உள்ளது. அகில இந்திய ஒதுக்கீடு போக, 85 இடங்கள் மாநிலத்திற்கு உள்ளது. 18 தனியார் கல்லுாரிகளில் இருந்து, 909 இடங்கள், மாநிலத்திற்கு கிடைக்கும்.இந்த இடங்கள் அனைத்தும், கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வினியோகம், இன்று தொடங்குகிறது.'சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்வி இயக்கம் மட்டுமின்றி, அரசு மருத்துவக் கல்லுாரிகள், அரசு பல் மருத்துவக் கல்லுாரியில், இன்று முதல், இம்மாதம், 30ம் தேதி வரை விண்ணப்ங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அடுத்த மாதம், 2ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக