பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து 15 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பில் ஒரே சீனியாரிட்டி வழங்கப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 9ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு 21ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ் வழங்கும்போது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இதனடிப்படையில் தேர்வு முடிவுகள் வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் இணைக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது.பதிவு எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யும் போது மாணவர் பற்றிய முழுவிபரமும் தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவரின் ரேஷன் கார்டு எண், ஜாதி, மதிப்பெண் சான்று ஆகியவற்றை பரிசோதித்து பள்ளி நிர்வாகம் வேலைவாய்ப்பக பதிவேட்டில் பதிவு செய்து பதிவு அட்டையை மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.
இவ்வாறு பதிவு செய்ய தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள், வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் பதிவு செய்யும் மாணவர்களுக்கு ஒரே பதிவுமூப்பு வழங்கப்பட உள்ளது.இதுபற்றி வேலைவாய்ப்பு அலுவலர் ஒருவர் கூறுகையில், Ôபள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளியில் பதிவு செய்ய முடியாதவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்யலாம். ஆன்லைன் வசதியில்லாத பள்ளியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தலைமையாசிரியர் உதவியுடன் அருகிலுள்ள பள்ளிகளில் பதிவு செய்து கொள்ளலாம். மதிப்பெண் சான்று வழங்கும் தேதியில் இருந்து 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும்Õ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக