தலைமை ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை ஆசிரியர்கள் நேற்று மாலை முற்றுகையிட்டனர். குமரி மாவட்டத்தில் +2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த 2 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மற்றொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுதவிர 12 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கலெக்டரின் அறிவுரையின்பேரில் முதன்மை கல்வி அதிகாரி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 3 தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மற்ற ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு 300க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் நேற்று மாலை வந்தனர்.ஆனால் அங்கு முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் இல்லை. முதன்மை கல்வி அதிகாரி இங்கு வந்தால்தான் நாங்கள் கலைந்து செல்வோம் என கூறி முதன்மை கல்வி அதிகாரியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இந்த தகவல் முதன்மை கல்வி அதிகாரிக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இரவு ஆகியும் முதன்மை கல்வி அதிகாரி வரவில்லை. இதனால் ஆசிரியர்கள் அங்கேயே இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக