லேபிள்கள்

10.5.14

திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று கீழ்பென்னாத்தூர் வட்டார வளமையத்தில் நடந்தது. உதவி திட்ட அலுவலர் கிருபாகரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்எஸ்ஏ) அ.புகழேந்தி பேசியதாவது:
ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பில் சேர தகுதியுள்ள மாணவர்களின் பட்டியலை தயார் செய்து, மாணவர் சேர்க்கை தொடர்பாக சம்மந்தப்பட்ட பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில் 50 சதவீத அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி வகுப்புகள் தொடங்குவது குறித்து விளக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வரும் கல்வி ஆண்டில் அதிகரிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம், கிராம கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்களை நடத்துதல் போன்ற பணியில், அனைவருக்கும் கல்வி இயக்க பணியாளர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாட புத்தகங்கள், சீருடைகள் போன்ற நலத்திட்டங்கள் உரிய காலத்தில் சென்றடைகிறதா என்பதை, பள்ளிகளுக்கு நேரில் சென்று உறுதி செய்ய வேண்டும். 

ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பில் சேர தகுதியுள்ள மாணவர்களின் பட்டியலை தயார் செய்து, மாணவர் சேர்க்கை தொடர்பாக சம்மந்தப்பட்ட பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில் 50 சதவீத அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி வகுப்புகள் தொடங்குவது குறித்து விளக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வரும் கல்வி ஆண்டில் அதிகரிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம், கிராம கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்களை நடத்துதல் போன்ற பணியில், அனைவருக்கும் கல்வி இயக்க பணியாளர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும்.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாட புத்தகங்கள், சீருடைகள் போன்ற நலத்திட்டங்கள் உரிய காலத்தில் சென்றடைகிறதா என்பதை, பள்ளிகளுக்கு நேரில் சென்று உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக