ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் ஆறு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை 2013ம் கல்வியாண்டிற்கான தேர்ச்சி அறிவிப்பது குறித்து தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இது குறித்து உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் துரைசாமி கூறியதாவது: ஆறு முதல் எட்டாம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு முழு சதவிகித தேர்ச்சியும், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தேர்வு எழுதாத மாணவர்களுக்கு இம்மாத இறுதியில் மறுதேர்வு வைக்கப்படும். தேர்வு முடிவுகள் தேர்வு எழுதிய இரு தினங்களுக்குள் வெளியிடப்படும். பிளஸ் 1 தேர்வு எழுத முடியாதவர்கள் மற்றும் தேர்ச்சி அடையாதவர்களுக்கு மறுதேர்வுகள் 9ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடக்கிறது என மாவட்ட கல்வித் துறை அறிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக