லேபிள்கள்

5.5.14

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இந்த ஆண்டு 25% ஒதுக்கீடு கிடையாது

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இந்த ஆண்டு 25% ஒதுக்கீடு தர முடியாது என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் நடந்த தனியார் பள்ளிகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளிலும் ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசு தரவில்லை, கல்வி கட்டணத்தை தராததால் இந்த ஆண்டு ஏழை மாணவர்களுக்கு இடமில்லை என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு கைவிரித்து விட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக