லேபிள்கள்

22.6.14

சாதனை மாணவர்களுக்கு பரிசு: ஒரு மாதம் கடந்தும் அரசு மவுனம் - தினமலர்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகி, ஒரு மாதம் கடந்தும், மாநில அளவில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு, பரிசு வழங்காமல், தமிழக அரசு மவுனம் சாதித்து வருகிறது. இதற்கிடையே, தி.மு.க., சார்பில், 469 மாணவர்களுக்கு, பரிசு வழங்கும் விழா, கோவையில், இன்று நடக்கிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவு, கடந்த, மே மாதம், 9ம் தேதி வெளியானது. இதில், மாநில அளவில், முதல் மூன்று இடங்களை, நான்கு மாணவர்கள் பிடித்தனர். 10ம் வகுப்பு தேர்வு முடிவு, மே, 23ம் தேதி வெளியானது. இதில், 465 பேர், முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். இரு தேர்வு முடிவுகளும் வெளியாகி, ஒரு மாதம் கடந்த நிலையிலும், சாதனை மாணவர்களுக்கு, பரிசு வழங்கும் விஷயத்தில், தமிழக அரசு, மவுனமாக இருந்து வருகிறது. தேர்வு முடிவு வெளியாகி, 10 நாட்களுக்குள் நடக்க வேண்டிய விழா, இந்த ஆண்டு, ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. 'முதல்வர் எப்போது, தேதி தருவார்' என, தெரியாத நிலையில், கல்வித் துறை அதிகாரிகளும் மவுனம் காத்து வருகின்றனர். தி.மு.க., பரிசு வழங்குவதற்கு முன், தமிழக அரசின் பரிசை வழங்கிவிட வேண்டும் என, அதிகாரிகள் நினைத்தனர். ஆனால், முதல்வர் அலுவலகத்தில், நிலைமையை எப்படி விளக்குவது என புரியாமல், அமைதியாகி விட்டனர். இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, தி.மு.க., சார்பில், அதன் பொருளாளர், ஸ்டாலின், கோவையில், இன்று நடக்கும் விழாவில், 469 மாணவர்களுக்கு, ரொக்கப் பரிசு வழங்குகிறார். அப்போது, தமிழக அரசின் கால தாமதம் குறித்து, ஸ்டாலின் பேசுவார் என, தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக