லேபிள்கள்

22.6.14

கடந்தாண்டு கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை: ஆதிதிராவிடர் நலத் துறை அதிகாரிகளால் பாதிப்பு - தினமலர்

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதில் மீண்டும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, தனியார் மேல் நிலைப் பள்ளி, கலைக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க முழு கல்வி கட்டணத்தையும், கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. கல்விக் கட்டணத்தை நேரடியாக நிறுவனங்களுக்கும், உதவித் தொகைகளை மாணவர்களுக்கும் அரசு வழங்குகிறது. இருப்பினும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகம் மூலம் உதவித் தொகை வழங்குவதில் மீண்டும் பழைய முறை களைப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இத்துறைகளில் பணியாற்றும் சில அதிகாரிகள், பள்ளி தலைமையாசிரியர்கள், கடந்த (2012--2013) கல்வியாண்டில் மாணவர்களுக்குச் செலுத்த வேண்டிய கல்வி உதவித் தொகை வழங்குவதில் முறைகேடுகளைச் செய்து, தற்காலிகப் பணி நீக்கமும் செய்யப்பட்டனர். இதனால் மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.


கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள், வங்கி கணக்கு எண் மற்றும் பாஸ் புத்தகத்தின் நகல் இணைத்தே விண்ணப்பிக்கின்றனர். இந்த ஆண்டும் (2013--14ல்) பள்ளிப்படிப்பை முடித்துள்ள பல மாணவர்களுக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை. உதவித் தொகை குறித்து மாவட்ட அலுவலர்களை அணுகி பெற்றோர்கள் கேட்டால், இன்னமும் அரசிடமிருந்து நிதி வரவில்லை என கூறுகின்றனர். சில மாவட்ட அதிகாரிகள் இந்த நிதியை வங்கிகளிலில் மார்ச் கணக்கு முடிக்கும் வரை அப்படியே வைத்திருந்து, வங்கிகள் மூலமும் பயன் பெறுகின்றனர். சில மாவட்டங்களில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தொகையை அனுப்பி, அவர்கள் மாணவர்களுக்கு வழங்குவார்கள் என பழைய முறையை பின்பற்றுகின்றனர். மாணவர்கள் படிக்கும் அந்தந்த ஆண்டிற்குரிய கல்வி உதவித் தொகையை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்திட அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக