லேபிள்கள்

24.6.14

கணக்குப்பதிவியலில் 147 மார்க் எடுத்த மாணவர் 'பெயில்' - தினமலர்

பிளஸ் 2 கணக்குப்பதிவியலில், 147 மதிப்பெண் எடுத்த கம்பம் மாணவர், 'பெயில்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. மறுகூட்டலில் மதிப்பெண் தவறு தெரிந்துள்ள நிலையில், அந்த மாணவர் உயர்கல்வி படிக்க முடியாமல் தவிக்கிறார்.

தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் மாரிமுத்து, 16; ராயப்பன்பட்டி சவரியப்ப உடையார் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்தார். கடந்த, மே மாதம் வெளியான தேர்வு முடிவின் போது, 'பெயில்' என, தெரிவிக்கப்பட்டது. மதிப்பெண் பட்டியலில் கணக்குப்பதிவியலில், 31 மதிப்பெண் என, இருந்தது. மனம் உடைந்த மாரிமுத்து, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றவர், மருத்துவமனையில் நான்கு நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். மாரிமுத்துவின் ஆசிரியர் அலெக்சாண்டர், மறுகூட்டலுக்கு ஏற்பாடு செய்ததில், கணக்குப்பதிவியலில், 147 மதிப்பெண் பெற்றது தெரியவந்தது. அதன்பின், தேர்வில் அவர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அனைத்து கல்லூரிகளிலும் சேர்க்கை முடிந்து விட்டதால், மாணவரின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. பெற்ற மதிப்பெண்ணை, தவறாக பதிவு செய்து, உயர்கல்வி படிக்க முடியாத நிலைக்கு தள்ளி, எதிர்காலத்திற்கும் உலை வைத்துள்ளது, தேர்வுத் துறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக