நெல்லிக்குப்பம், வான்பாக்கத்தில் சாரதா நிலைய உதவிபெறும் துவக்கப் பள்ளியில் 71 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளிக் கட்டடம் நான்கு ஆண்டுகளுக்கு முன் வீசிய தானே புயலில் முற்றிலும் சேதமானது. இதுவரை புதிதாக கட்டடம் கட்டப்படாததால், அங்குள்ள சமுதாய கூடத்திலேலே வகுப்புகள் நடக்கிறது. ஒரே அறையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகள் நடப்பதால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.
மேலும் இப்பள்ளியில், தலைமையாசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றினர். ஒரு ஆண்டுக்கு முன் ஒரு ஆசிரியர் ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக வேறு ஆசிரியர் நியமிக்கவில்லை.தொடர்ந்து, ஆறு மாதத்திற்கு முன் ஓய்வு பெற்ற தலைமையாசிரியருக்கு பதிலாகவும் வேறு தலைமையாசிரியர் நியமிக்கப்படவில்லை. தற்போது ஒரு ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார்.
ஒரு ஆசிரியை மட்டுமே உள்ளதால் ஒழுங்காக பாடம் நடத்த முடியவில்லை. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. இவர் விடுமுறை எடுத்தால் அன்று பள்ளிக்கு விடுமுறை விட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுபற்றி அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். உடனடியாக கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்காவிட்டால் பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதைத் தொடர்ந்து பண்ருட்டி அடுத்த அம்மாபேட்டை பள்ளியில் பணியாற்றிய டெல்சி என்ற ஆசிரியை, தற்காலிகமாக ஒரு வாரம் மட்டும் வான்பாக்கம் பள்ளிக்கு டெபுடேஷனில் அனுப்பப்பட்டுள்ளார். மாணவர்கள் நலன் கருதி நிரந்தரமாக ஆசிரியரை நியமிக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக