பட்டதாரி ஆசிரியர்கள் 500 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக ஆன்-லைன் மூலம் புதன்கிழமை (ஜூன் 25) பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
தகுதி வாய்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் இந்த கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள ஆயிரம் பேரிலிருந்து 500 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படும். இவர்களுக்கான பதவி உயர்வு ஆணைகளும் புதன்கிழமையே வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமும், 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும் நேரடியாக நிரப்பப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக