அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, 58லிருந்து, 60 ஆக, ஆந்திர மாநில அரசு உயர்த்தி உள்ளது. இது தொடர்பான, ஆந்திர மாநில பொது வேலைவாய்ப்பு திருத்தச் சட்டம், 1984க்கு, ஆந்திர மாநில சட்டசபை, நேற்று ஏகமனதாக ஒப்புதல் அளித்தது. சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
'இந்தியர்கள் சராசரியாக, 65 வயது வரை வாழ்கின்றனர்' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில், ஆந்திர அரசு ஊழியர்களின் ஓய்வு வயது, 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது, 1998ல், 58லிருந்து, 60 ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல், ஆந்திர மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயதும் உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த அரசு ஊழியர்களின் சேவை மற்றும் அனுபவத்தை, மாநில அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், ஓய்வு வயது உயர்த்தப்பட்டுள்ளது. வேலையில்லாத இளைஞர்கள், வேலை வாய்ப்பு பெறும் வரை வழங்கப்படும், மாதாந்திர உதவித் தொகை, 1,000 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு, சந்திரபாபு நாயுடு கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக