ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் நியமனம் தொடர்பான கவுன்சிலிங்கை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கடல்குடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக இருப்பவர் வையண்ணன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;-
மறைப்பு:
தமிழகத்தில் 100 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. எனக்கு மேல்நிலைப்பள்ளியில் உயிரியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பதவி பெற தகுதி உள்ளது.
இந்நிலையில், ஆசிரியர் பணியிடங்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கின் போது, மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை அதிகாரிகள் மறைத்து விட்டனர். பணியிட மாறுதல் கேட்காத ஆசிரியர்களுக்கு, அந்த இடங்கள் மறைமுகமாக வழங்கப்பட்டது.
ரத்து செய்ய வேண்டும்:
அதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு இதுபோல் இடங்களை வழங்குகின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த கவுன்சிலிங்கின்போது, காலி இடங்கள் இருந்தும் அவற்றை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம் ராமானுஜம்புதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் காலியாக இருந்த இடத்தை காட்டாமல், அந்த இடத்துக்கு சீனிபிரியா என்ற ஆசிரியரை நியமித்துள்ளனர். எனவே சீனிபிரியாவுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனக்கு அந்த பணியிடத்தை வழங்க உத்தரவிட வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஏற்கனவே மனுதாரர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச், இடம் மாறுதல் மற்றும் பணி நியமனம் தொடர்பான கவுன்சிலிங் வெளிப்படையாக நடைபெறுவதில்லை என்றும், ரகசியமாக நடைபெறுகிறது என்றும் கூறியுள்ளது. மனுதாரர் தொடர்ந்த வழக்கு வெற்றி பெறாமலும், அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
தற்போது, அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் சீனிபிரியா என்ற ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
நேர்மை
இந்த வழக்கு விசாரணையின்போது, ஜூன் 24-ந் தேதி (நேற்று முன்தினம்) ஆசிரியர் பணியிட மாறுதல் தொடர்பான கவுன்சிலிங் நடைபெற உள்ளதாகவும், அந்த கவுன்சிலிங்கிற்கு தான் விண்ணப்பித்துள்ளதால், சீனிபிரியா பணி நியமனத்துக்கு தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. எனவே, பள்ளி கல்வித்துறை ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் பணி நியமனம் தொடர்பான கவுன்சிலிங்கை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக