தமிழகம் முழுவதும், இம்மாதம் 26க்குள் புதிதாக, 2,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க, கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.
இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பணி மாறுதல் செய்யப்பட்டால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதா என்ற தகவலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக, உபரி ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இப்புதிய பணியிடங்களை, ஆங்கில வழி வகுப்புகளுக்கு பாடவாரியாக ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களை, இம்மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் நடக்கும், பணிநிரவல், 'கவுன்சிலிங்' முன் ஒதுக்கீடு செய்யவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக