ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், தனியார் மேல்நிலைப் பள்ளி, கலைக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க, முழு கல்வி கட்டணத்தையும், மூன்று ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது.
கல்விக் கட்டணத்தை, நேரடியாக நிறுவனங்களுக்கும், உதவித்தொகையை, மாணவர்களுக்கும் அரசு வழங்கு கிறது. இருப்பினும், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அலுவலகம் மூலம், உதவித்தொகை வழங்குவதில், மீண்டும் பழைய முறையை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இத்துறையில் பணியாற்றும் சில அதிகாரிகள், பள்ளி தலைமையாசிரியர்கள், 2012 - 2013ம் கல்வியாண்டில், மாணவர்களுக்குச் வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையில் முறைகேடு செய்ததை அடுத்து, தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால், மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு, நேரடியாக பணம் செலுத்த அரசு உத்தரவிட்டு உள்ளது. கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள், வங்கி கணக்கு எண் மற்றும் பாஸ் புத்தகத்தின் நகலை இணைத்தே விண்ணப்பிக்கின்றனர். இந்த ஆண்டு, (2013 -- 14ல்) பள்ளி படிப்பை முடித்துள்ள பல மாணவர்களுக்கு, உதவித்தொகை கிடைக்கவில்லை. உதவித்தொகை குறித்து, மாவட்ட அலுவலர்களை அணுகி பெற்றோர் கேட்டால், அரசிடம் இருந்து நிதி வரவில்லை என, கூறுகின்றனர். சில மாவட்ட அதிகாரி கள், இந்நிதியை, வங்கி களில் மார்ச் கணக்கு முடிக்கும் வரை அப்படியே வைத்திருந்து, வங்கிகள் மூலமும் பயன் பெறுகின்றனர். சில மாவட்டங்களில், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தொகையை அனுப்பி, அவர்கள், மாணவர்களுக்கு வழங்குவர் என, பழைய முறையை பின்பற்றுகின்றனர். மாணவர்கள் படிக்கும், அந்தந்த ஆண்டிற்குரிய கல்வி உதவித்தொகையை, நேரடியாக, மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்திட, அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக