லேபிள்கள்

23.6.14

ஆசிரியர்களே சிந்திப்பீர்........ TNGTF பொதுச்செயலாளர்

*மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றக் கூடாது என்று சொல்லி அரசாணை ஏதும் இல்லாத நிலையில் இத்தனை பேர் கட்டாய இடமாற்றம் செய்யப்பட்டதை எந்த சங்கமும் கண்டுகொள்ளாதது ஏன்?

*அரசாணை எண் 52 பள்ளிக்கல்வித்துறை நாள் 30.03.2006ன் படி BRTE AND B.T ASST ARE INTERCHANGEABLE. எனக் கூறப்பட்டுள்ளது.பின் அவர்கள் மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றக்கூடாது எனச் சொல்வது நியாயமா? நாளை இது அனைத்து ஆசிரியர்களுக்கும் நீட்டிக்கப்பட்டால் என்ன செய்யப் போகிறோம்.

*மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை எனச் சொல்லி supervisor பணியிடங்களை காலி செய்த அரசு இப்போது block coordinator என அதே பணியிடத்தில் brte களை கட்டாய நியமண செய்வது சரியா?

*ஒரு பதவி வழங்கப்படும் போது வேண்டாம் எனச் சொல்ல relinquish உரிமை மறுக்கப்பட்டது ஏன்?

* district coordinator பணியிடத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் யாரை வேண்டுமானாலும் நியமிக்க சர்வாதிகர அதிகாரம் வழங்கலாமா?

*பணிநிரவல் என்று சொல்லி பல் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை ஒவ்வொரு ஆண்டும் புதிய விதிகளைச் சொல்லி தூக்கியடிப்பது, அர்சு விரும்பும் பொதெல்லாம் , மாணவர் எண்ணிக்கை குறியும் பொது கடைசியாக அனுமதிக்கப்பட்ட பணியிடத்தை உபரி பணியிடம் எனக் கணக்கிடாமல் ஒவ்வொர் ஆண்டும் பாடங்களை மாற்றுவது ஏமாற்று வேலை அல்லவா?

*100 பேர் உள்ள ஒரு உய்ர்நிலைப்பள்ளியில் உபர் ஆசிரியர் எனச் சொல்லி ஒரு பணியிடத்தை எடுத்து விட்டு மீண்டும் ஒரு பணியிடம் கொடுப்பது பணிநிரவ்லா? ஒருவரை வெளியே எடுத்துவிட்டு மற்றொர்வரை அனுமதிப்பது பணி நிரவலா? ( உய்ர்நிலைப்பள்ளியில் ஒரு ஆங்கில பணியிடத்தை எடுத்துவிட்டு அறிவியல் பணியிடம் வழங்கப்படுகிறது,காரணம் புரியவில்லை ,இதனால் 100 மாணவர்களுக்கு 3 அறிவியல் ஆசிரியர்கள் 1 ஆங்கில ஆசிரியர். இது சமநிலையா?


* இப்படியே போனால் எல்லா உரிமையையும் விட்டுவிட்டு வாய் மூடி நிற்க போகிறோமா. பணிநைரவல் எனச் சொல்லிவிட்டு பின் பணிநியமனம் எப்படி சாத்தியம்?

சிந்திப்பீர்"



                                                                                TNGTF பொதுச்செயலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக