மதுரையில் நடந்து வரும் பொது மாறுதல் 'கவுன்சிலிங்கில்' காலி பணியிடங்களை மறைத்ததாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அதிகாரிகளின் சமாதானத்திற்கு பின், பங்கேற்றனர்.
முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, சங்க நிர்வாகிகளிடம், "தற்போது காண்பிக்கப்பட்ட காலி பணியிடங்களை முதலில் தேர்வு செய்யுங்கள். மறைக்கப்பட்ட பணியிடங்கள் குறித்து கல்வி அதிகாரிகளிடம் பின் பேச்சுவார்த்தை நடத்துங்கள்," என்றார். ஒரு மணி நேரத்திற்கு பின், துவங்கிய கவுன்சிலிங்கில் 17 இடங்களையும் ஆசிரியர்கள் தேர்வு செய்தனர்.
தர்ணா:
தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் 'கவுன்சிலிங்', மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. டி.வள்ளாளபட்டி, மாணிக்கம்பட்டி உட்பட பல இடங்களில் பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. ஆசிரியர்கள் தர்ணா நடத்த முடிவு செய்தனர். பின், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட இடங்கள் காண்பிக்கப்பட்டு 'கவுன்சிலிங்' நடந்தது. 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட கீரனூர் பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கும் மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக