லேபிள்கள்

26.6.14

பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு: நாளை துவங்குகிறது

பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு, அண்ணா பல்கலையில், நாளை முதல் நடக்கிறது. நடப்பு கல்வி ஆண்டில், பி.இ., படிப்பில் சேர, 1.68 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, கடந்த 24ம் தேதி நடந்தது.
மொத்த ஒதுக்கீடான, 500 இடங்களில், 449 இடங்கள், கலந்தாய்வில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மீதமுள்ள, 51 காலி இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, பின் நடத்தப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு, நேற்று நடந்தது. 5,000 காலி இடங்கள் உள்ள நிலையில், 400 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். இவர்களில், 303 பேர் மட்டும், நேற்றைய கலந்தாய்வில் பங்கேற்றனர். 200க்கும் அதிகமான மாணவர்கள், சேர்க்கைக்கான உத்தரவை பெற்றனர். இதைத் தொடர்ந்து, பெரும்பான்மை மாணவர்கள் பங்கேற்கும், பொதுப்பிரிவு கலந்தாய்வு, நாளை காலை முதல், ஜூலை 28ம் தேதி வரை நடக்கிறது. இதற்கு, தினமும், 5,000 மாணவர்கள் அழைக்கப்படுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக