லேபிள்கள்

24.6.14

மாணவரே இல்லை; ஆசியர் பணிமாறுதல் கலந்தாய்வு உண்டு

சிவகங்கையில் ஒரு மாணவர் கூட இல்லாத இரு அரசு பள்ளிகளுக்கு, ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில், இடைநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. ஒன்றியம் வாரியாக காலியிட விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
கண்ணங்குடி ஒன்றியத்தில் கும்மங்குடி, உடையனசமுத்திரம், மாடக்கோட்டை; திருப்புத்தூரில் என்.எம்.பள்ளி, திருக்களாப்பட்டி, கீழநிலை, அச்சரம்பட்டி ஆகிய பள்ளிகள் காலியிடமாக அறிவிக்கப்பட்டன. இதில், 'கும்மங்குடி, என்.எம்.பள்ளிகளில் மாணவர்களே இல்லை' என அறிவித்து இருந்தனர். யாரும் இந்த பள்ளிகளை தேர்வு செய்யவில்லை. தொடக்கக்கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கடந்த 2 ஆண்டாகவே இரு பள்ளிகளிலும் மாணவர்களே இல்லை. இப்பள்ளிகளை மூடுவதிலும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மாணவர்கள் இல்லை என்றாலும், காலியிடமாக அறிவிக்க முடியாது. 'காலியிடம் மறைக்கப்பட்டு விட்டது' என புகார் எழும் என்பதால், 'மாணவர் இல்லை' என்பதை குறிப்பிட்டு இருந்தோம்' என்றார்.
Click Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக