லேபிள்கள்

26.6.14

அரசு பள்ளியில் விதிமீறி மாணவர்கள் சேர்க்கை; நடவடிக்கை கோரி மனு

 திருப்பூர், ஜீன் 26; தலித் விடுதலை இயக்க மாநில இணை பொதுச்செயலாளர் கருப்பையா, கலெக்டர் கோவிந்தராஜிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது; வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டில் 1ம் வகுப்பில் 31 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதில் 10 மாணவர்கள் அரசின் விதிமுறைக்கு மாறாக 5 வயது நிறைவடையாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




     மேலும் கடந்த கல்வி ஆண்டில் 3ம் வகுப்பு படித்த மாணவி சரியான வயது பூர்த்தியடையாத காரணத்தால் நடப்பு கல்வியாண்டில் மீண்டும் 3ம் வகுப்பிலேயே அனுமதித்துள்ளனர். இது அரசின் கல்வி கொள்கைக்கு எதிரானதாக உள்ளது. ஆகவே, இப்பிரச்சனையில் நேரடியாக தலையிட்டு அரசின் விதிமுறைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக