தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 13,505 கழிவறைகள் மற்றும் 1,637 பள்ளிகளில் குடிநீர் வசதிகள் ரூ.92 கோடி செலவில்
மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த பணிகள் அனைத்தும் வரும் ஜூலை மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009ன்படி, அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீதம் கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும். ஆனால், 2,057 பள்ளிகளில் கழிவறைகள் இல்லை என்பது கடந்த ஆண்டு நடந்த ஆய்வில் தகவல்கள் வெளியானது. எனவே, அந்த பள்ளிகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை, ஒருங்கிணைந்த பள்ளி அடிப்படை வசதி மேம்பாடு திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி, நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி நிதி ஆகியவற்றின் மூலம் கழிவறைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதைதொடர்ந்து, 2013-14ம் கல்வி ஆண்டில் 1,677 பொது கழிவறைகள், 2,130 பெண்கள் கழிவறை மற்றும் 1,637 பள்ளிகளில் குடிநீர் வசதிகள், 9,518 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கழிவறைகளுக்காக ரூ.92.16 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது அந்தப் பணிகள் நடந்து வருகின்றன.
வரும் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பதற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பொது கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கழிவறைகள் இல்லாத 2,057 பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர கடந்த நிதி ஆண்டில் ரூ.92.16 கோடி மதிப்பில் 13,505 கழிவறைகள் மற்றும் 1,637 பள்ளிகளில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடக்கிறது. மேலும், வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் 45 தொடக்க பள்ளிகளுக்கு 2 அல்லது 3 வகுப்பறைகள் கொண்ட சொந்த கட்டிடம் ரூ.6.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் வரும் ஜூலை மாதத்திற்குள் முடிக்க பள்ளி கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக