லேபிள்கள்

21.5.15

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

பத்தாம் வகுப்பில் சாதனை: அரசு பள்ளி மாணவர்கள் மூவர் உட்பட 41 பேர் மாநில அளவில் முதலிடம்-எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.



தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில் பெற்றுள்ளனர். 500-க்கு 498 மதிப்பெண் பெற்று 192 பேர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 540 மாணவர்கள் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளி சாதனை:

முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் 19 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள். இவர்களில் 3 பேர் மாநிலத்தில் முதலிடம், 6 பேர் மாநிலத்தில் இரண்டாம் இடம், 10 பேர் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.

பிறமொழியை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தவர்களில் 500-க்கு 500 பெற்று 5 மாணவர்கள் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.

மொத்த தேர்ச்சி விகிதம் 92.9%

மொத்த தேர்ச்சி விகிதம் 92.9%. இதில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம்: 90.5% | மாணவிகள் தேர்ச்சி விகிதம்: 95.4% ஆகும். வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாகவுள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 90.7% ஆக இருந்தது.

பாடவாரியாக முழு மதிப்பெண்:

கணிதப் பாடத்தில் 27,134 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 1,15,853 பேர் 100-க்கு 100 பெற்றனர். சமூக அறிவியலில் 51,629 பேர் 100-க்கு 100 பேர் பெற்றுள்ளனர்.

முதல் வகுப்பில் தேர்ச்சி:

பத்து லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 60 சதவீதத்துக்கு மேல் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 7,96,466 ஆகும்.

அரசு தேர்வுத் துறையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை கல்லூரிச் சாலை டிபிஐ வளாகத்தில் தேர்வுத் துறையின் இயக்குநர் கே.தேவராஜன் தேர்வு முடிவுகளையும், மாநில அளவில் ரேங்க் பெற்றவர்களின் பட்டியலையும் வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக