லேபிள்கள்

19.5.15

ஜூன் 21ல் பள்ளி, கல்லூரிகளில்யோகா பயிற்சி நடத்த உத்தரவு

அனைத்து கல்லுாரிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஜூன் 21ல், யோகா பயிற்சி காட்சி நடத்த, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.



பிரதமர் மோடி ஐ.நா., சபை சென்றபோது, 'ஜூன் 21ம் தேதியை, யோகா தினமாக அறிவிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார். இதையொட்டி, ஜூன் 21ம் தேதி யோகா தினமாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக பரிந்துரையின் பேரில், 'அனைத்து கல்வி நிறுவனங்களிலும் காலையில், யோகா பயிற்சி காட்சி நடத்த வேண்டும். மாணவர்களுக்கு யோகா குறித்த விழிப்புணர்வு போட்டிகள் வைத்து, பரிசு வழங்க வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக