லேபிள்கள்

20.5.15

நாளை 10ம் வகுப்பு 'ரிசல்ட்':'104'ல் ஆலோசனை துவக்கம்

தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மே 29ம் தேதி
வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள், மே 21ம் தேதி, காலை 10:00 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள், தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி, மாதம், ஆண்டை இணைய தளத்தில் குறிப்பிட்டு, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின், தேசிய தகவலியல் மையங்கள், மைய மற்றும் கிளை நூலகங்கள் மற்றும் படித்த பள்ளிகளில், தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, மே 29ம் 
தேதி முதல், மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய பள்ளியிலும் பெற்றுக் கொள்ளலாம். இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, ஜூன் 4ம் தேதி முதல், தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார். ஆலோசனை: மாணவர்கள், பெற்றோருக்கான, '104' மருத்துவ ஆலோசனை மையத்தில், தொலைபேசி வழி, மனநல ஆலோசனை துவக்கப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து, விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது: மதிப்பெண் குறைவு; தோல்வி என, மன உளைச்சலுக்கு ஆளாகுவோர், பக்குவமின்றி சிலர் தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றனர்; இதற்கு, பெற்றோரும் காரணம். போதிய விழிப்புணர்வு இல்லாததும், சரியான வழிகாட்டல் இல்லாததுமே, இதற்கு காரணம். இது போன்றோர், '104'யை தொடர்பு கொண்டால், நல்ல மனநிலை பெற முடியும். இரு நாட்களாக, பிரத்யேக குழு ஆலோசனை வழங்கி வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக