லேபிள்கள்

18.5.15

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு நாளை 'ரிசல்ட்?'

 நடப்பு கல்வியாண்டுக்கான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 2ம் தேதி துவங்கின. 10ம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் 26ம் தேதியும், பிளஸ் 2 தேர்வுகள், ஏப்., 20லும் முடிந்தன. 
 
               நாடு முழுவதும், 10ம் வகுப்பில், 13.73 லட்சம் பேர்; பிளஸ் 2வில், 10.40 லட்சம் பேர் என, மொத்தம், 9,450 பள்ளிகளைச் சேர்ந்த, 24 லட்சம் பேர் தேர்வு எழுதினர். சென்னை மண்டல தேர்வு முடிவுகளை, 10ம் வகுப்புக்கு, மே  19ம் தேதியும், பிளஸ் 2வுக்கு, மே 29ம் தேதியும் வெளியிட, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதன்படி, மே 19ம் தேதி (நாளை) 10ம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தவறினால், வரும் 21ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முடிவுகளை,http://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக