லேபிள்கள்

23.9.15

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றமா? 'வாட்ஸ் ஆப்'பில் பரவிய வதந்தி!

பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா உட்பட, பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டதாக, 'வாட்ஸ் ஆப்'பில் நேற்று பரவிய வதந்தியால், அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்கள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலை உறுதிபடுத்தாமல், சில, 'டிவி' சேனல்கள் மற்றும் இணையதளங்களும் இச்செய்தியை ஒளிபரப்பின. 

ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ, அரசுத் துறைக்கோ, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றம் செய்யும் பொதுத்துறைக்கோ, இதுகுறித்த எந்த தகவலும் தெரியவில்லை.


பட்டியல்

அதனால், தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், தொடர்ந்து குழப்பத்தில் இருந்தனர். காலை, 11:00 மணி முதல் பிற்பகல், 3:00 மணி வரை, போனில் விசாரித்த வண்ணம் இருந்தனர். 'மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பட்டியல்' என்ற தகவலும், 'வாட்ஸ் ஆப்'பில் வெளியானது. இதைப் பார்த்த பிறகே, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம் என்பது வதந்தி என்பது உறுதியானது. 

ஏனென்றால், அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த சில அதிகாரிகள், பல மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றவர்கள்; ஒரு அதிகாரி, சில மாதங்களுக்கு முன் விபத்தில் காலமாகிவிட்டார். இந்த வதந்தியால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 2012 பட்டியலை, யாரோ ஒருவர் தவறாக மூன்று ஆண்டுகளுக்கு பின் வெளியிட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை முதலில் வெளியிட்ட அந்த நபர் யார் என, அரசு தரப்பில் விசாரணை துவங்கிஉள்ளது.



ஹெல்மெட் இதேபோன்ற ஒரு வதந்தி, நேற்று முன்தினம் மாலையிலும், 'வாட்ஸ் ஆப்' மூலம் பரவியது. பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட யுவராஜ் கைது செய்யப்பட்டார்; நாமக்கல் மாவட்ட எஸ்.பி.,செந்தில்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார் என்று வதந்திகள் பரவின. அதுமட்டுமின்றி, 'ஹெல்மெட்' அணிவதிலிருந்து பெண்களுக்கு விலக்களிக்க முதல்வர் உத்தரவு; 'டாஸ்மாக்' கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு என்றும், தவறான தகவல்கள், 'வாட்ஸ் ஆப்'பில் வலம் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக