தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
---------------------------------அறிக்கை--------------------------
மத்திய அரசு கடந்த வாரத்தில் அறிவித்த500,1000 ரூபாய செல்லாது என்ற அறிவிப்பால்,தமிழக அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள் தங்கள்வசமுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளைமாற்றுவதற்கு வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குஉள்ளாகி உள்ளனர். இதனால் அலுவலகம் செல்லும் முன்பும் ,பின்பும் ATM முன்பாக நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
பெரும்பாலான அரசு ஊழியர்கள் குடியிருப்பதற்கு போதிய அரசு வாடகைகுடியிருப்புகள் இல்லாததால், தனியார்வீடுகளில்தான் குடியிருந்து வருகின்றனர்.இந்த குடியிருப்புகளுக்கான வாடகைமாதந்தோறும் தங்களது ஊதியத்திலிருந்து செலுத்தி வருகின்றனர். மேலும் குழந்தைகளுக்கான கல்வி கட்டணம்,மருத்துவ செலவு, வீட்டு மளிகை பொருட்களைவாங்குவதற்கான செலவு உள்ளிட்டசெலவுகளை செய்ய இயலாமல் உள்ளனர்.தற்போது, சம்பளம் உள்ளிட்ட அனைத்துபணப்பட்டுவாடாக்களும் ஊழியர்களின் வங்கிகணக்கில்தான் வரவு வைக்கப்படுகின்றன.
தற்போதுள்ள வங்கி கட்டுப்பாடுகளால்,மத்திய அரசின் வருமான வரித்துறைக்குகணக்குக்களை முறையாக சமர்ப்பித்து,ஊதியத்தை பெற்றுவரும் ஊழியர்கள்தங்களது பண இருப்பை பெற இயலாமல்போகும் நிலை உருவாகி உள்ளது. த்ற்போது மத்திய அரசு நாள் ஒன்றுக்கு வங்கியில் மாற்றக்கூடிய தொககையினை ரூபாய் நான்காயிரத்தில் இருந்து இரண்டாயிரமாக குறைத்துள்ளது.
*பண்டிகைக் காலம் வர உள்ளதையும், சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் ATM வாசல்களில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதையும் கருத்தில் கொண்டு இம்மாத ஊதியத்தையும் , காலதாமதம் செய்யப்பட்டுவரும் ஜீலை முதல வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத்தொகையையும் விரைவில வழங்குவத்ற்கான அரசாணை வெளியிட்டு அதையும் வங்கி கணக்கில்வரவு வைக்காமல், ரொக்கமாகவழங்குவதற்கான நடவடிக்கைகளைவிரைந்து மேற்கொள்ள தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்*
****************************
*பீ. பேட்ரிக் ரெய்மாண்ட*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு பட்டதாரி. ஆசிரியர் கூட்டமைப்பு*
***************************"

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக