எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, வரும் 17-ஆம் தேதியன்று அரசு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வியாழக்கிழமை (ஜன.12) வெளியாகவுள்ளது.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா வரும் 17-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தினத்தை ஒட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆளும்கட்சியான அதிமுக ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
மேலும், ஆண்டு முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்த தினத்தைக் கொண்டாடவும் அந்தக் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு விடுமுறை: கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒருபுறம் இருக்க, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த தினம் என்பதால் வரும் 17-ஆம் தேதியன்று அரசு விடுமுறை விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த விடுமுறையை விடுவதற்கான கோப்புகள் கையெழுத்திடப்பட்டு, அதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை (ஜன.12) அல்லது வெள்ளிக்கிழமை (ஜன.13) வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக