லேபிள்கள்

5.7.13

அனைவருக்கும் கல்வி இயக்கம்

ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உரிய அரசு செலவு கணக்கில் திரும்ப செலுத்த உத்தரவு.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக அரசு ஆணைகளின்படி தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குஅனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் ஊதியம்என்ற மாநில அரசு செலவுத் தலைப்பில் சம்பந்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அவலர்கள் / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாதந்தோறும் ஊதியப் பட்டிகள் மூலம் கருவூலத்தில் ஊதியம் பெற்று வழங்குகிறார்கள்.


ஊதியம பட்டுவாடா செய்யப்பட்டபின் ஊதியம் வழங்கப்பட்ட இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆரம்பப் பள்ளி / நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்களின் எண்ணிக்கையை வட்டார / மாவட்ட அளவில் தொகுத்து உரிய அரசு செலவுத் தலைப்பு (2201-01-101-AD-0109/2202-02-109-AZ-0108) மற்றும் ஊதியம் பெற்றுத் தந்ததற்கான சான்றுடன் (Payment Certificate) சம்பந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் (Regular CEO) மாதந்தேறும் அந்தந்த மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கேட்புக் (Demand) கடிதம் அனுப்பி வைக்க வேண்டும்.

 

திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கோவை-திருப்பூர், ஈரோடு-திருப்பூர் என கேட்பு (Demand) கடித விவரங்கள் தனித்தனியாக கோவை, ஈரோடு கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

கேட்புக் கடிதங்களிலுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கைப்படி, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அலகு தொகைப்படி (Unit cost) கணக்கிட்டு, அத்தொகையினை 15 நாட்களுக்குள் மாநிலத் திட்டஇயக்குநரால் ஒதுக்கீடு செடீநுயப்படும் திட்ட நிதியிலிருந்து மாநில அரசின் கணக்கில்அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆசிரியர்கள் ஊதியம்என்ற றறற.வமேயடஎi.உடிஅ

அரசு வரவுத் தலைப்பில் ((Credit Head 0202-01-101-AA-1204/0202-01-102-AK-0001) செலுத்துச் சீட்டு மூலமாக கரூவூலத்தில் செலுத்த வேண்டும். செலுத்தப்பட்ட விவரத்தை அந்தந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தொடக்கக் கல்வித் துறையை பொறுத்த மட்டில், இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும், ஆரம்பப் பள்ளி தலைமயாசிரியர்களுக்கும், நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தனித்தனியாக செலுத்துச் சீட்டு தயாரிக்கப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்பட வேண்டும்.

2013-14 ஆம் ஆண்டிற்குஆசிரியர் ஊதியம்தலைப்பில் மாவட்டங்களுக்கு ஏப்ரல் 2013 இல் வழங்கப்பட்ட மார்ச் 2013 ஊதியத்திற்கான, ஒரு மாத நிதி 27.06.2013 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
(
இணைப்பின்படி)

 

செலுத்துச் சீட்டு நகலுடன் மாவட்டத்திற்குரிய ஆசிரியர் எண்ணிக்கை விவரங்களையும் சேர்த்து Sanctioned / Inposition/Vacant) மாதாந்திரஅறிக்கையை அடுத்தடுத்த மாதம் 16 ஆம் தேதி மாநிலத் திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. (படிவம் இணைக்கப்பட்டுள்ளது)


ஒப்பம் 29.06.2013
மாநிலத் திட்ட இயக்குநர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக