3 நபர் குழுவின் பரிந்துரையின் பேரில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 237ல் தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு 01.01.2006 தேதி முதல் 31.03.2013 வரை (பணப்பலனின்றி) சம்பளத்தில் கணக்கிடப்பட்டு அதற்கான பணப்பலன் 01.04.2013 முதல் 3% என்று வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம் தற்போது 3%+3% ஆக மாற்றி வழங்கப்படும்.
01.01.2006 முதல் 31.05.2009 வரை தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், 01.06.2009க்கு பின் தேர்வு நிலை / சிறப்பு நிலை முடித்தோற்கு ஊதிய விகிதம் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை, அவர்களுக்கு 3% ஊக்க ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது. அது தற்போது தற்போது 01.01.2006 முதல் இந்த ஆணை அமுலுக்கு வருவதால், ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்பட்ட ஆசிரியர்களும் பலன் பெறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக